முக்கிய கவனிப்பு

முன்சொன்ன காரணங்களால் பாதிக்கப்பட்ட வாலிபர்கள் மீண்டும் தங்களுக்கு பழைய சக்தியை ஏற்படுத்திக்கொண்டு மணம் செய்வது நல்லது.

வீட்டில் தாய் தகப்பனார் கல்யாணத்திற்கு அவசரப்படுத்துகிறார்களே என்பதற்காக மணம் செய்துகொள்ளக்கூடாது.

உங்கள் உடம்பின் நலத்தை மேல் வாரியாகச் சொல்லியாவது உடலுக்கு சக்தி ஏற்படுத்திக்கொண்டு மணம் செய்வது நல்லது.

வெட்கப்பட்டுக்கொண்டோ, கூச்சப்பட்டுக்கொண்டோ ஒன்றும் பேசாமல் மணம் செய்துகொண்டால் உங்கள் வாழ்க்கையில் நல்ல சுகத்தையே எதிர்பார்க்கமுடியாமல் மனைவியின் வெறுப்பை சம்பாதித்துக்கொள்ளலாமே தவிர ஒற்றுமையான வாழ்க்கை நடத்த இயலாது.

அநேகர் மண வாழ்க்கையில் திருப்தியில்லாத காரணத்தால் விவாகரத்து ஏற்படும் சம்பவங்களும், ஒருவர் மீது ஒருவருக்கு வீணான சந்தேகங்கள் ஏற்படும் சூழ்நிலைகள் உருவாகும்.

இந்த மாதிரி சந்தர்ப்பங்களுக்கு இடம் கொடுக்காமல் தங்களுடைய உடம்பில் மீண்டும் ஆரோக்கியத்தை ஏற்படுத்திக்கொண்டு மணம் செய்வது நல்லது.

ஒரு வாலிபரோ, மணம் செய்துகொண்டவர்களோ முன் பக்கத்தில் குறிப்பிட்ட மாதிரி பாதிக்கப்பட்டிருந்தால் தகுந்த வைத்தியரிடம் குறைந்தது 6, 9, 12 மாதங்களாவது தொடர்ந்து சிகிச்சை பெற்றால்தான் மீண்டும் நல்வாழ்வு பெறமுடியும் என்ற என்னுடைய கருத்தை இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

2, 3 மாதங்களில் குணப்படுத்த முடியாது. ஏமாறவேண்டாம்.